இன்றுடன் முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்: நாளை முதல் கடலுக்கு செல்லும் மீனவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அதற்கு ஏதுவாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன் பிடி தடை காலம் என அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இன்றுடன் மீன்பிடி தடை காலம் முடிவடைய உள்ளதை அடுத்து நாளை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுவதன் காரணமாக கடலில் மீன்வளம் அதிகரித்து அதன் பின்னர் வரும் 10 மாதங்களுக்கு மீன்கள் தாராளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் 2 மாத மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து மீனவர்கள் புத்துணர்ச்சியுடன் இன்று கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன