செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (11:36 IST)

சோதனை சாவடியை சுற்றி வளைத்த காட்டுயானை! – பல மணி நேரம் பதுங்கி இருந்த ஊழியர்கள்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியை ஒற்றை காட்டுயானை சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே தமிழக, கர்நாடக எல்லை பகுதியில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்துள்ளனர்.

வழக்கம்போல சோதனை சாவடியில் காவலர்கள் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த போது காட்டுக்குள்ளிருந்து திடீரென வெளிப்பட்ட ஒற்றை காட்டுயானை சோதனை சாவடி பகுதியையே சுற்றி வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த சோதனை சாவடி ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே பதுங்கி கொண்டிருந்துள்ளனர்.

சில மணி நேரங்கள் சுற்றி திரிந்த காட்டுயானை பின்னர் அங்கிருந்து சென்றுள்ளது. சோதனை சாவடியையே காட்டுயானை சுற்றி வளைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.