செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:06 IST)

டிடிவி தினகரனை முதல்வராக்குவது லட்சியம்! – கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம்!

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனை முதல்வராக்குவது லட்சியம் என அமமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தீவிரமான தேர்தல் பணிகள் இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அமமுகவின் கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினரனை முதல்வர் இருக்கையில் அமர செய்வதே லட்சியம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த எந்த முடிவையும் எடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் அதிமுகவை மீட்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.