1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (17:12 IST)

அமெரிக்காவில் அம்மா உணவகம்: அதிமுக அதிரடி!

அதிமுக அரசின் சாதனை திட்டங்களில் மிக முக்கிய திட்டமாக கூறுவது அம்மா உணவகம். ரூ.1-க்கு ஒரு இட்லி, ரூ.5-க்கு சாதம் என ஏழை எளிய மக்களின் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், அண்டை மாநிலத்தில் உள்ளவர்களும் பின்பற்றும் திட்டமாக மாறியது.


 
 
எகிப்து, அமெரிக்கா போன்ற நாட்டினரும் இங்கு வந்து அம்மா உணவகத்தை பார்வையிட்டு பாராட்டியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில், நியூ ஜெர்சியில் உள்ள எடிசன் பகுதியில் அமெரிக்க அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினரால் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இங்கு ஒரு இட்லி ஒரு டாலர், சாம்பார் சாதம் 5 டாலர், எலுமிச்சை சாதம் 3 டாலர் என விற்கப்படுகிறது.
 
அமெரிக்காவில் உள்ள அம்மா உணவகத்தின் முகவரி:-
 
1700, oak tree road, Edison , New jersey - 08820.
ஸ்வாகத் ரெஸ்டாரென்ட் அருகில்.
தொலைபேசி: (0609) 3258256