திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2023 (16:20 IST)

'எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்: அதிமுகவில் இணைந்த நிர்மல்குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து..!

Annamalai
தமிழக பாஜகவில் இருந்து விலகிய நிர்மல் குமார் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததை அடுத்து எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக நிர்மல் குமார் தெரிவித்த நிலையில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறி இருப்பதாவது
 
“ அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிய போதும் அவர் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க தனது வாழ்த்துக்கள் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழக பாஜக வில் இருந்த பிரமுகர் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு என்ற கருதப்படுகிறது.
 
Edited by Siva