வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (07:52 IST)

அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித் துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்ற அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இந்த அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பை மீறி கல்லூரிகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது