1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (11:58 IST)

கருணாநிதி உடல் நலத்துடன் திரும்பி வர வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சிறுநீரக தொற்று நோய் காரணமாக நேற்று காய்ச்சல் இருந்ததாக அவருக்கு சிகிசை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்ததை அடுத்து அவருடைய உடல்நலம் குறித்து பீதி பரவியது.
 
நேற்றிரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஒருசில அதிமுக அமைச்சர்கள், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தனர். மேலும், விரைவில் அவர் குணம் பெற வேண்டும் என பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “ கலைஞர் கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க ஓ.பி.எஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் நேற்று இரவு சென்றனர். அவர் நலமுடன் இருப்பதாக என்னிடம் கூறினார்கள் அவர் பூரண நலம் பெற்று திரும்பிட அதிமுக சார்பில் வேண்டுகிறோம்” என அவர் தெரிவித்தார்.