செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 டிசம்பர் 2016 (18:27 IST)

தமிழக முதல்வரை சந்திக்கும் அஜித்: அரசியல் அடிதளமா?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடிகர் அஜித் குமார் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் அஜித் அவரது அரசியல் அடிதளம் குறித்து விவாதிக்கப்படும் என்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் பல்கெரியாவில் இருந்து நேற்று இரவு வந்தார். ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே இணையதளங்களில் அஜித் அடுத்த முதலமைச்சர் என்றும், ஜெயலலிதாவின் பிரியமானவர் என்றும் செய்திகள் பரவி வந்தது.
 
இந்நிலையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை அஜித் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு துக்கம் விசாரிக்கும் சந்திப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இது அரசியல் அடிதளத்துக்கு ஏதுவான சந்திப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.