1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Aishwarya Dhanush Met Minister Venkaiah Naidu

அமைச்சரிடம் மனு கொடுத்த நடிகர் தனுஷின் மனைவி!

ஐஸ்வர்யா தனுஷ்
இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 


 

 
இந்நிலையில், தற்போது சினிமா வீரன் என்ற பெயரில் டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். 
 
இப்படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் உள்ள ஸ்டண்ட் கலைஞர்களை மையப்படுத்தி எடுக்க இருக்கிறார். 
 
இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 
 
இப்படத்தின் காட்சிகளுக்கு ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்கவுள்ளார். விரைவில் இந்த டாக்குமெண்டரி பிலிம் உருவாகவிருக்கிறது. 
 
இந்நிலையில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவை ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்தபோது, அவரிடம் தேசிய விருது பட்டியலில் ஸ்டண்ட் கலைஞர்களையும் இணைக்க வேண்டி மனு ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பெண்ணாக உணர பெண்ணுறுப்பு தேவையில்லை - பெண்ணாக மாறிய நடிகர் கருத்து