ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 29 ஜூலை 2023 (10:39 IST)

சென்னை விமான நிலையத்தின் திரையரங்கை மூட உத்தரவு: விமான ஆணையம் அதிரடி முடிவு..!

சென்னை விமான நிலைய வளாகத்தில் ஆறு அடுக்கு கார் பார்க்கிங் உள்ள திரையரங்கை மூட அதிரடியாக விமான ஆணையம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின்  கார் பார்க்கிங் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வணிக வளாகம், ஓட்டல், திரையரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் திரையரங்குகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திரையரங்கிற்கு விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மட்டுமின்றி வெளியில் உள்ள பொதுமக்களும் வந்து கார் பார்க்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்வதால் விமான பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து  கார் பார்க்கிங் உள்ள திரையரங்குகளை மூட விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு தியேட்டர் வளாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்  இந்த விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran