வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (14:33 IST)

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

Jayakumar
அதிமுகவுடன் ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ’அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்ட ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் இணைந்து திமுகவை வைப்போம் என்றும் தெரிவித்தார். 
 
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக விகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு தொடரும் என்றும், அதிமுகவை பொருத்தவரை எந்த காலத்தில் மறைமுக கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்தார்.
 
கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தான் நேற்று பொதுச் செயலாளர் தெளிவாக சொல்லி இருக்கிறார் என்றும், பாஜகவை தவிர்த்து திமுகவின் வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்களுடன் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்றும் அவர் கூறினார். 
 
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றும் இன்றைய நிலை என்றும் தொடரும் என்றும் இதை திசை திருப்பி விவாத பொருளாக்கி ஆதாயம் தேடும் முயற்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
 
 
 
Edited by Mahendran