1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:33 IST)

"எல்லாமே சசிகலாவின் பின்னணி தான்" - செங்கோட்டையன் அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பின்னணியில் தான் கட்சியை வழிநடத்தி செல்கிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ள செங்கோட்டையன், ”ஹைட்ரோ கார்பன் திட்ட பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எங்கும் எதிர்ப்பில்லை. சட்டசபையை பொறுத்தவரை பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம். அவர்கள் எல்லோரும் சேர்ந்தாலும் கூட 108 பேர் தான். எங்களிடம் பலம் அதிகம். இரட்டை இலை சின்னம் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு தான்.

அதிமுக எப்போதும் போல் வலிமையுடன் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பின்னணியில் தான் கட்சியை வழிநடத்தி செல்கிறோம். அதைபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைக்க கூடாது என்று ஸ்டாலின் கூறுவது சரியல்ல. அவருக்கு தகுதியும் அல்ல. ஜெயலலிதாவினால்தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.