வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (20:32 IST)

உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்: பாமக ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் முதல் நபராக இணைந்த பாமக நிறுவனர் ராமதாஸ் 7 மக்களவை தொகுதிகளிலும், ஒரு மாநிலங்களவை தொகுதிகளையும் சுளையாக பெற்றுவிட்டார். மேலும் நேற்று நடந்த இரவு விருந்தில் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் பேசி முடிவாகிவிட்டதாகவும் விரைவில் இவை அறிவிக்கப்படும் என்றும் பாமக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற பாமக கூட்டம் ஒன்றில் பேசிய டாக்டர் ராமதாஸ், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மட்டுமின்றி சட்டமன்ற இடைத்தேர்தலான 21 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற நாம் பாடுபட வேண்டும் என்று பேசினார். மேலும் வரும் ஜூன், ஜூலையில் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் இந்த கூட்டணி குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வேலையை யாரும் செய்ய வேண்டாம் என்றும், நமது நோக்கம் வெற்றி, அதை நோக்கியே நமது அடுத்தகட்ட பணி இருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறினார்.