திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (14:15 IST)

சரக்கு வாங்க வயது சான்று அவசியம்

டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குபவர்கள் குறித்து வயது சந்தேகம் எழுந்தால், வயது சான்றுள்ள அடையாள அட்டையை உறுதி செய்துவிட்டு மதுபாட்டில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது என, கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
 
இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் சிலர் கூறுகையில், வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.