ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 17 மே 2017 (12:07 IST)

மீண்டும் ஐடி ரெய்டு: விழிபிதுங்கும் விஜயபாஸ்கர்!

மீண்டும் ஐடி ரெய்டு: விழிபிதுங்கும் விஜயபாஸ்கர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த ஆர்கே நகர் தேர்தலின் போது வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஐடி ரெய்டில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.


 
 
இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை, மனைவி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வருமான வரித்துறையினர் மீண்டும் அதிரடியாக சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
 
விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் கடந்த 5-ஆம் தேதி தான் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையை சேர்ந்த பெண் அதிகாரிகள் தலைமையில் 4 பேர் கொண்ட குழு இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
 
கடந்த முறை சோதனை நடத்தியபோது பூட்டிக்கிடந்த அறையில் தற்போது சோதனை நடத்தி வருவதாகவும், மேலும் ஏற்கனவே ரெய்டு நடத்தி கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்த போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கைகள் வலுத்தது. இந்நிலையில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதால் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் விழிபிதுங்கி நிற்கிறார்.