தமிழகத்தில் விரைவில் பூரண மதுவிலக்கு: மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்
பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கை அடிப்படையில் தமிழக அரசு கொஞ்ச கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை மூட முடிவு செய்தது.
அதைத்தொடர்ந்து முதல்கட்ட நடவடிக்கையாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. தற்போது பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு நடைப்பெற்று வருகிறது.
இதனால் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.