1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தக்காளியுடன் வெங்காயம் விலையும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

onion tomato
தக்காளியுடன் வெங்காயம் விலையும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது தக்காளியுடன் சேர்த்து வெங்காயம் விலையும் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்ற நிலையில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. 
 
இந்த நிலையில் சில்லரை விலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தக்காளி போலவே வெங்காயம் விலையும் உயர்ந்து வருகிறது
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூபாய் 25 என இருந்த வெங்காயம் தற்போது 45 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. தக்காளி மற்றும் வெங்காயம் இரண்டுமே விலை ஏறி உள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.