இன்று முதல் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: இன்னும் ஒரு ஞாயிறு மட்டுமே இருப்பதால் நிம்மதி
நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன என்பதும் வாகனங்களின் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன என்பதும் தெரிந்ததே. முழு ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் நேற்று நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய, வழக்கமான ஊரடங்கு, அமலுக்கு வருகிறது. எனவே இன்று முதல் மீண்டும் கடைகள் திறக்கப்படும், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்னும் ஒரே ஒரு ஞாயிறு அதாவது ஜூலை 26ஆம் தேதி மட்டுமே இருப்பதால் அந்த ஒரு நாளை கடந்துவிட்டால் சென்னை உள்பட தமிழகத்தில் இனி முழு ஊரடங்கு என்பது இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தமிழகத்தில் இனி முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் வழக்கமான ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் இந்த ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுமா? அல்லது ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுமா? என்பது மத்திய அரசு எடுக்கும் முடிவை பொருத்தே உள்ளது