1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After investigation Vivek return to his house

விசாரணை முடிந்து வீடு திரும்பினார் விவேக்

vivek
ஜெயா டிவி மேனேஜிங் டைரக்டர் விவேக் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் அளிக்கவே ஆஜரானதாக தகவல்கள் வெளிவந்தது.


 


இந்த நிலையில் சற்றுமுன்னர் விவேக் விசாரணை முடிந்து வீடு திரும்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை சுமார் ஐந்துமணி நேர விசாரணையின் முடிவில் அவர் வீடு திரும்பியுள்ளார். இதன்மூலம் விவேக் கைது செய்யப்படுவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் என்னென்ன கேள்வி கேட்டனர், அதற்கு விவேக் என்ன விளக்கம் அளித்தார் என்பது குறித்து விவேக் தெரிவிக்க மறுத்துவிட்டார். வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து தகவல் தெரிவிக்காததால் விசாரணையின் விபரம் தெரியவில்லை
 
அடுத்த கட்டுரையில்
விண்ணை முட்டுகிறது முட்டை விலை: ரூ.10 வரை செல்லும் என தகவல்