1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lord Shiva Will Take Care of Those Obstructing Thiruparankundram Deepam: Union Minister Dharmendra Pradhan

திருப்பரங்குன்றம் பிரச்சனையை சிவபெருமான் பார்த்து கொள்வார்: மத்திய அமைச்சர்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிப்பவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 
 
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இந்த உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை. இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுக்கள் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளன. 
 
இந்த சூழலில் பேசிய தர்மேந்திர பிரதான், "நீதிமன்றத் தீர்ப்பு இருந்தும் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பது முட்டாள்தனமானது. ஹிந்துக்களின் நம்பிக்கையோடு தமிழக அரசு அரசியல் விளையாட்டை விளையாடுகிறது. புனிதமான கார்த்திகை தீபத்தைத் தடுக்க நினைப்பவர்களுக்குச் சிவபெருமான் தகுந்த பாடம் புகட்டுவார்" என்று கூறினார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திருத்தணி விவகாரம்!. முழு சிகிச்சை பெறாமலே சென்ற சுராஜ்!.. மர்மம் என்ன?...