1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (09:34 IST)

டேய் பொட்ட பையா?: அதிமுக பெண் எம்எல்ஏவின் அநாகரிக பேச்சு!

டேய் பொட்ட பையா?: அதிமுக பெண் எம்எல்ஏவின் அநாகரிக பேச்சு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோரஞ்ஜிதம் நாகராஜன். இவருக்கு எதிராக அந்த தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவின் போது ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம் கட்சியின் மாவட்ட பிரதிநிதியான சக்திவேலுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை அசிங்கமாக பேசி அறைந்துள்ளார்.
 
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் அன்று எம்எல்ஏ மனோரஞ்ஜிதம், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட சக்திவேலை இரண்டு பேர் சேர்ந்து பிடித்துக்கொள்ள மனோரஞ்ஜிதம் அவரை டேய் பொட்ட பையா? என் கிட்டையேவா என கூறி அவரை அசிங்கமாக பேசி சட்டையை கிழித்து கன்னத்தில் பளார் என ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.


 
 
இதனையடுத்து இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்திருந்தாலும் இரண்டாவது முறையாக ஊத்தங்கரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த அதிமுக நிர்வாகிக்கு பொங்கல் பரிசாக கன்னத்தில் பளார் என அறைவிட்ட ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி நன்றி என கூறப்பட்டுள்ளது.