1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (17:32 IST)

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகல்: அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிமுக..!

ADMK
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் சற்றுமுன் அதிமுக வெளியிட்டுள்ள தீர்மானத்தில் தேசிய ஜனநாயக  கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.  
 
இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியில்  இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணிகளில் இருந்தும் விலகிக் கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது.  
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் எங்களுடைய கழக தெய்வங்கள் ஆன பேரறிஞர் அண்ணா அவர்களையும் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும் எங்களை கொள்கையின் விமர்சித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran