ஜெயலலிதா உடல்நிலை - அப்பல்லோவில் குவியும் அதிமுக தொண்டர்கள்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
கடந்த 70 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மாலை திடீரென ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. மேலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆலோசனையின் பேரில் இருதய மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் கேள்விப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் குவிந்து வருகின்றனர். முதல்வர் குணமாக வேண்டும் என அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.