திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 20 ஜூன் 2016 (13:25 IST)

முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி - போட்டுத்தாக்கிய செம்மலை

முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி - போட்டுத்தாக்கிய செம்மலை

முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என செம்மலை கூறியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 

 
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில்  அதிமுக எம்எல்ஏ செம்மலை பேசுகையில், ஆளுநர் உரையை அம்மா காலண்டர் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து விளக்கம் அளித்தார்.
 
மேலும், முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி என்று குறிப்பிட்டார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
 
கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால், அவர் அவையில் இல்லாவிட்டாலும் கூட அவர்குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்றார். இதனால் சபையில் மேலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.