1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 20 மே 2016 (12:01 IST)

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று: முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஜெயலலிதா

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியமைக்க உள்ளார்.


 
 
ஆட்சியமைப்பதற்கான பணிகள் அதிமுகவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று மதியம் 2 மணியளவில் ஜெயலலிதா தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
 
இதனையடுத்து மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
 
பின்னர் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் ஜெயலலிதாவை முதல்வராக தேர்வு செய்வதற்கான கடிதத்தை வழங்குவார்கள். இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.