செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (17:37 IST)

பாஜகவுடன் கூட்டணி முறிவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி முறிந்ததாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தின் முன் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 
 
கடந்த சில ஆண்டுகளாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி இருந்தது என்பதும் ஆனால் கூட்டணி தர்மத்தையும் மீறி பாஜக தலைவர்கள் அதிமுகவின் மறைந்த தலைவர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இதனை அடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடியதை அடுத்து இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டத்திலிருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. 
 
மேலும் அதிமுக தலைமையில் பாஜக அல்லாத மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்
 
Edited by Mahendran