1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜூலை 2022 (15:23 IST)

ஓபிஎஸ்-இன் போட்டி அதிமுக: 14 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

ops
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தன்னிடமிருக்கும் போட்டி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓபிஎஸ் சற்றுமுன் 14 அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி கோவை மாவட்ட அதிமுக செயலாளராக கோவை செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம்  மாவட்ட  அதிமுக செயலாளராக ஆர். தர்மர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
மேலும் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோபாலகிருஷ்ணன் நியமனம்  செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ops

ops


ops