1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (14:45 IST)

அந்தரத்தில் நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பு: அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!

அந்தரத்தில் நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாகவும், நிவர் புயல் காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் 22 அடி நிரம்பிவிட்டது 
 
இதனை அடுத்து இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு காரணமாக தற்போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது 
 
இதன் காரணமாக கரையோரங்களில் இந்த சுற்றுப்புற குடியிருப்பு சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் அடையாறு ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அந்தரத்தில்  நின்று கொண்டிருப்பதால் அந்த குடியிருப்பில் இருந்த பொது மக்களை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர் எந்த நேரத்திலும் அந்த குடியிருப்பு இடிந்து விழுந்து ஆபத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது