பாலியல் தொல்லை பற்றி பேசிய நடிகை நமீதா!

பாலியல் தொல்லை பற்றி பேசிய நடிகை நமீதா!


Caston| Last Modified வெள்ளி, 18 நவம்பர் 2016 (12:07 IST)
சோனியா அகர்வால் நடித்த சாயா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை நமீதா குழந்தைகளுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசினார்.

 
 
சென்னை வடபழனியில் நடந்த இந்த விழாவில் பேசிய நடிகை நமீதா, அரசியலும் சினிமாவும் சமூகம் சார்ந்து இருப்பதால் அவற்றின் மூலமாக நல்லது செய்ய முடியும் என்பதால் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறேன். அதிக செலவுகள் கொண்டதாக மாறியிருக்கும் கல்வியால் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
 
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் சமூகத்தில் நிறைய நடக்கின்றன. நாம் அருகில் இருந்தும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் என்பது பற்றி குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி அவர்களை கவனமாக வளர்த்து நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டும் என்றார்.
 
குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல டியூசன் போன்றவற்றை கொடுத்தலுடன் நின்றுவிடாமல் நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுத்து அவர்களிடம் நிறைய பேசுங்கள். நிறைய கேளுங்கள். அம்மா அப்பா இருவரும் குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நமீதா பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :