கலாய்த்த ரஜினியை திடீரென சந்தித்த கஸ்தூரி
கடந்த சில மாதங்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பெற்று வருபவர் நடிகை கஸ்தூரிதான். எந்த படத்திலும் நடிக்காவிட்டாலும் டுவிட்டர் பதிவுகள் மூலமே புகழ் பெற்று வருகிறார்.
மு.க.ஸ்டாலின் முதல் ரஜினி வரை கலாய்த்து வரும் கஸ்தூரி விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவர் ரஜினி குறித்த கருத்த என்னவெனில் ', 'நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை... 'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது..' என்று கூறி ரஜினி ரசிகர்களின் கண்டனத்தை பெற்றார்.
இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினியை அவரது வீட்டில் கஸ்தூரி நேரில் சென்று சந்தித்தார். இன்னா செய்தாரை ஒருத்தல் என்ற பண்பை உடைய ரஜினி, கஸ்தூரியை வரவேற்று அவரிடம் சீரியசாக பலவிஷயங்கள் பேசியதாக கூறப்படுகிறது. எனவே ரஜினி கட்சி ஆரம்பித்தால் கஸ்தூரி அக்கட்சியில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்