1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (17:50 IST)

ஊரில் உள்ள கெட்ட வார்த்தையெல்லாம் பேசும் காயத்ரி - விளாசும் நடிகை ஸ்ரீபிரியா

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதில் கலந்து கொண்டிருப்பவர்கள் பற்றியும் நடிகை ஸ்ரீபிரியா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதாக கூறினார். மேலும், அந்த நிகழ்ச்சியில் ஓவியாவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறிய அவர்  காயத்ரி பற்றியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


 

 
காயத்ரியின் தந்தை ரகுராம் மற்றும் தந்தை கிரிஜா ஆகியோரை எனக்கு தெரியும். அவர்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களின் மகளான காயத்ரியா இப்படி பேசுகிறார் என எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ‘சீராக இருக்கு’ அப்டிங்கிற வார்த்தை தெரியல. ஆனால், தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் தெரிஞ்சிருக்கு. பொதுவெளியில் நாகரீகமாக இருக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.