1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2017 (11:39 IST)

தகுதி இல்லாதவர்கள் வரும்போது நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாதா? - கஸ்தூரி விளாசல்

அடிப்படை தகுதிகள் கூட இல்லாதவர்கள் அரசியலுக்கு வரும்போது, நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் நடிகர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர் எனப் புகார் கூறிய நடிகை கஸ்தூரி, சமீபத்தில் பிரபல வார இதழ் விகடனுக்கு பேட்டியளித்தார். அதில் சில பணக்காரர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தனர் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவர் அரசியல் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
சினிமா பிரபலங்கள் அரசியல் பேசுவதை நான் வரவேற்கிறேன். இதில் சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  சினிமாவில் இருப்பவர்கள் அரசியல் பேசினால் எதிர்க்கிறார்கள். ஒடுக்க நினைக்கிறார்கள்.  யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை அசிங்கப்படுத்துவதில் நியாயம் இல்லை.
 
தகுதி இல்லாதவர்களும், யார் என்றே தெரியாதவர்களும் அரசியலுக்கு வரும் போது, மக்களிடம் பிரபலமான ஒரு சினிமா நடிகர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது?. அரசியலுக்கு வருவதற்கு சினிமா நடிகர்களுக்கு தகுதி இல்லை எனில், தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் தகுதிகளோடுதான் இருக்கிறார்களா என கேட்கத் தோன்றுகிறது.
 
நடிகர், நடிகைகள் பற்றி வரும் கிசுகிசுக்களை ரசித்து படிப்பதில் ஆர்வம் காட்டும் சமூகம், சமூக பிரச்சனைகள் குறித்து சினிமா பிரபலங்கள் கருத்து சொல்ல வேண்டும் என எதிபார்க்கும் சமூகம், அதே சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வரக்கூடாது என கூறுவதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை” என அவர் கூறினார்.