வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (21:26 IST)

நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு - தமிழக அரசு

நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன், அவரது நடிப்புத் திறமையின் மூலம் கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் திறந்து வைத்தார்.
 
சிவாஜியின் குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்கத்தினர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என வற்புறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அக்டோபர் 1 ஆம் தேதியான சிவாஜி பிறந்தநாள், இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். 
முதல்வரின் அறிவிப்பிற்கு சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.