செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (08:29 IST)

இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்

இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்
இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்று ஜெயலலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.