1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (19:25 IST)

நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சி நாளை தொடங்குகிறார்

தமிழகத்தில் ஏற்கனவே சரத்குமார் கமல்ஹாசன் டி ராஜேந்தர் உள்பட பல நடிகர்கள் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான் திடீரென புதிய கட்சி தொடங்குகிறார் என்று அறிவித்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை பிப்ரவரி 25ஆம் தேதி தனது கட்சியின் பெயரை காலை 9 மணிக்கு அறிவிக்க இருப்பதாகவும் தனது அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று சசிகலாவை சீமான் சந்தித்ததால் அதிருப்தி அடைந்த மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்குவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.