திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (18:36 IST)

கருமுட்டை விற்பனை விவகாரம்: மருத்துவத்துறை இணை இயக்குநர் எச்சரிக்கை

egg
கருமுட்டை விற்பனை விவகாரம்: மருத்துவத்துறை இணை இயக்குநர் எச்சரிக்கை
தனியார் மருத்துவமனை மீது விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருமுட்டை விவகாரம் குறித்து மருத்துவ துறை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
கரு முட்டை விற்பனை விவகாரம் கடந்த இரு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகள் மீது விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத் துறை இணை இயக்குனர் விசுவநாதன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
மேலும் தகுந்த ஆவணங்கள் அடிப்படையிலேயே கருமுட்டை எடுக்கப்பட்டதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்
 
சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் வெளிமாநிலங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்திய பின் மருத்துவத்துறை இணை இயக்குனர் விசுவநாதன் பேட்டி அளித்துள்ளார்