சென்னை விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து 300க்கும் மேற்பட்ட பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானமும், பெங்களூர் செல்லவிருந்த கோ ஏர்வேஸ் விமானமும் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானங்கள் புறப்படவிருந்த சிறிது நேரத்தில் எந்திர கோளாறு இருப்பது தெரியவந்ததை அடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 300 க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். ஏர் இந்தியா மற்றும் கோ ஏர்வேஸ் நிறுவனங்கள் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்யவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்