வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:37 IST)

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியும் தமிழக மக்களின் மனதில் மட்டுமின்றி இந்திய இளைஞர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவருமான அப்துல்கலாம் அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த பள்ளியை பார்க்கும் அனைவருக்கும் அப்துல்கலாமின் ஞாபகம் வரும். இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நாம் அப்துல்கலாம் படித்த பள்ளியில் படிக்கின்றோம் என்ற பெருமை இருக்கும் 
 
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் மின் இணைப்பு இன்று திடீரென துண்டிக்கப்பட்டது.  இதற்கு காரணம் இந்த பள்ளியின் நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணத்தை கட்டவில்லையாம். மின்வாரிய அதிகாரிகள் பலமுறை கேட்டுக்கொண்டும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை என்பதால் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.