வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (10:24 IST)

60 பெண்களின் ஆபாச படங்கள்: இளம்பெண்களை குறிவைக்கும் கும்பல்

இளம்பெண்களை குறிவைத்து அவர்களை ஆபாசமாக படம்பிடித்து, மிரட்டி பணம் பறித்து வந்த வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் சபரிராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இவர்களின் நட்பு காதலானது.
 
இந்நிலையில் கல்லூரியில் இருந்த காதலிக்கு போன் செய்த சபரிராஜன், வெளியே செல்லலாம் என்று கூறினார். இதனை நம்பிய மாணவி சபரிராஜன் கூப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சபரிராஜன் காதலியை ஆபாசமாக படம் பிடித்துள்ளார். பின்னர் இந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி, அந்த பெண்ணிடன் 1 பவுன் செயினை பறித்தார்.
 
வீட்டிற்கு சென்ற அந்த பெண் தனக்கு நேர்ந்த அவலங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ந்துபோன அவர்கள் சபரிராஜன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த அயோக்கியன் சபரிராஜனை கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையில் சபரிராஜன் மற்றும் அவனது நண்பர்கள் இதுவரை 60க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படமெடுத்து அவர்களை மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவனது நண்பர்களை தேடி வருகின்றனர்.