ஸ்பெஷல் சக்தி பெற 3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி

women
Last Modified திங்கள், 5 நவம்பர் 2018 (11:24 IST)
புதுக்கோட்டையில் பெண் மந்திரவாதி ஒருவர் 3 வயது குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் பெண் பிள்ளைகள் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சேலம் சிறுமி ராஜலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை எற்படுத்தியது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில், பெண் மந்திரவாதி ஒருவர் வெள்ளைச்சாமி முருகாயியின் 3 வயது ஷாலினியை கடத்திக் கொண்டு போகியிருக்கிறார்.
 
பின்னர் கொடூரத்தின் உச்சமாய் தனது மந்திரசக்தியை அதிகரிக்க அந்த பிஞ்சுக் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.
 
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த பெண் மந்திரவாதியை பிடித்து விசாரித்தனர். முதலில் ஒன்றும் தெரியாதது போல் பேசிய அந்த பெண் மந்திரவாதி, போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தன் மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
 
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரையெல்லாம் சிறையில் அடைக்காமல் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்கள் பலரின் கருத்தாக உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :