விஜய்சேதுபதியின் ‘றெக்க’ படத்தின் இயக்குனர் வீட்டில் திருட்டு!
விஜய் சேதுபதி நடித்த றெக்க என்ற படத்தை இயக்கிய இயக்குன் அர் ரத்தின சிவா வீட்டில் திருட்டு நடந்துள்ளதால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள இயக்குனர் சிவாவின் வீட்டில் தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த நீர் தொட்டியின் இரும்பு மூடியைத் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்
மது குடிப்பதற்கும் சில்லறை செலவிற்கும் இது போன்ற சின்ன சின்ன திருட்டுக்களை பலர் செய்து வருவதாக காவல்துறையினர் இந்த புகாரை பெற்ற உடன் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த பகுதியில் குழந்தைகள் அதிகம் விளையாடுவதால் அவர்களுடைய பாதுகாப்புக்காக இந்த இரும்புய் மூடி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அதனை திருடர்கள் மனசாட்சியின்றி திருடி சென்றுள்ளதாகவும் இயக்குனர் சிவாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.