திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:50 IST)

நண்பர்களுடன் தகராறில் இளைஞர் படுகொலை!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரு வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள காந்தி நகர் ரவுண்டானாவில்  இன்று காலையில் ஒரு வாலிபர் உடலில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துகிடந்தார். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வட மா நில வாலிபரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர், அதியோல், நண்பர்களுடன் ஏற்பட்ட தராறு கைகலப்பாக மாறியதும், அவர்கள் இவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதும் தெரியவந்துள்ளாது,. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.