செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (08:13 IST)

சென்னையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை
புதிய தலைமைச்செயலகமாக கட்டப்பட்டு அதன்பின்னர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாறிய சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனை, தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
இந்த மருத்துவமனையில் 350 பெட்கள் கொண்ட தனித்தனி வார்டுகள், நோயாளிகளை தனிமைப்படுத்தப்படும் வசதி, கொரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இருப்பதாகவும், இந்த கொரோனா சிறப்பு மருத்துவமனையை தானே நேரில் பார்த்து ஆய்வு செய்து திருப்தி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே இனிமேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒடிசாவில் முதல்வர் பட்நாயக் அவர்களின் அதிரடி முயற்சியால் இந்தியாவின் முதல் கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது