பெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை

பெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை
Last Modified வியாழன், 26 மார்ச் 2020 (21:07 IST)
பெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திரையுலகில் சேர்ந்த யாரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருமானம் இன்றி இருக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் லட்சக்கணக்கில் உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திரையுலகில் உள்ள ஊழியர்களை போலவே சின்னத்திரை ஊழியர்களும் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கும் நிதியுதவி அளித்து உதவி செய்ய வேண்டுமென்றும் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உதவிகரம்‌ நீட்டும்‌ உன்னத உள்ளங்களுக்கு வணக்கம்‌. உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும்‌ இந்த கொரானா தாக்குதலால்‌, சின்னத்திரை உலகமும்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தாங்கள்‌ அறிவிர்கள்‌. வேலைகள்‌ அனைத்தும்‌ நிறுத்தப்பட்டிருப்பதால்‌, இந்த தொழிலையே நம்பிவாழும்‌ சின்னத்திரை கூட்டமைப்பை சேர்ந்த உதவி இயக்குநர்கள்‌, நடிகர்கள்‌, எழுத்தாளர்கள்‌, படத்தொகுப்பாளர்கள்‌,
ஒலிப்பதிவாளர்கள்‌ மிகவும்‌ பாதிக்கப்பட்டு, அன்றாட தேவைகளை கூடபூர்த்திசெய்ய முடியாமல்‌ வேதனைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்‌.
இந்த கழ்நிலையில்‌ பெரியதிரையை சேர்ந்த பல தயாரிப்பாளர்களும்‌, நடிகர்களும்‌ பெப்சி மூலமாக பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டிருப்பது ஆறுதலாக இருக்கிறது. அதேபோல்‌, சின்னத்திரையை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும்‌ ஆயிரக்கணக்கான குடும்பங்களின்‌ வேதனைகளை குறைக்க எங்கள்‌ சங்க உறுப்பினர்களுக்கு பண உதவியோ, பொருளுதவியோ செய்தால்‌ அது அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ பேருதவியாக இருக்கும்‌.
இந்த உதவிகளை நாங்கள்‌ என்றென்றும்‌ மறக்கமாட்டோம்‌. மாறாக உங்கள்‌ உதவியை உலகத்திற்கு பறைசாற்றுவோம் என்று தெரிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :