1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:14 IST)

சென்னை அகர்வால் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை: ஹவுஸ்கீப்பர் நேபாளி தலைமறைவு!

Robbery
சென்னையில் உள்ள பிரபல ஸ்வீட் கடை அகர்வால் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கு வேலை செய்த நேபாளி ஒருவர் தலைமறைவாகியுள்ளார்
 
 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் அகர்வால் ஸ்வீட் கடை உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேபாளத்தை சேர்ந்த ராஜன் என்பவரை வேலைக்கு வைத்து இருந்தார். அவருக்கு என தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஸ்வீட் கடைக்கு சென்ற உரிமையாளர் அதன் பின் மாலை 5 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பத்து லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நாணயங்கள் தங்க மோதிரம் தங்க செயின்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ந்தார் 
 
இதுகுறித்து காவல்துறை அவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.