புதிதாக போடப்பட்ட சாலைகளில் ரோடு ரோலர் ஓடியதால் பரபரப்பு
முதல்வர் வருகைக்காக ? கரூர் ஏற்கனவே புதிதாக போடப்பட்ட சாலைகளில் ரோடு ரோலர் ஓடியதால் தார்சாலைகள் சேதம் மற்றும் வாகன நெரிசல் – மேலும், அந்த ரோடு ரோலர் ஓடிய காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11 ம் தேதி அன்று அரவக்குறிச்சி பகுதியில் புதிதாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை துவக்கி வைக்க உள்ளார். 11 ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதியதாக 50,000 விவசாய மின் இணைப்புகளை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். இதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் ஆங்காங்கே துரிதமாக பணியாற்றி வரும் நிலையில், தற்போது, தார்சாலைகள் ஏதேனும் பட்டி டிங்கரிங் பார்ப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சார்பில் உள்ள ரோடு ரோலர் இயந்திரம் கரூர் பேருந்து நிலையம் வழியாக கோவை சாலையை கடந்த பைபாஸ் சாலை வழியாக ஓடிய காட்சிகளும் இதனால் ஏற்கனவே போடப்பட்ட தார்சாலைகள் சிறிதளவு டேமேஜ் ஆன காட்சிகளும், இந்த ரோடு ரோலர் சென்றதால் வாகன நெரிசல்கள் ஆன காட்சியும் கரூர் மாநகரில் வைரலாகி வருகின்றது.
Edited by Sinoj