1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A raid in coimbatore aavin office

கோவை ஆவின் அலுவலகத்தில் சோதனை: லஞ்சம் பெற்றதாக புகார்!

aavin
கோவை ஆவின் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை ஆவின் அலுவலக தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர் 
 
ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது 
 
இந்த புகாரின் அடிப்படையில் தான் கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva