திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (10:58 IST)

ஒரே நாளில் பேமஸ் ஆன ஆசிரியர் பகவான் - ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு

ஆசிரியர் பகவானை  ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான். இவர் 5 வருடங்களுக்கு முன் பணிக்கு வந்தார். ஆசிரியரைத் தாண்டி மாணவர்களுடன் நண்பரைப்போல் பழகியதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இவர்மீது அதீத பிரியம்.
 
இந்நிலையில், அவருக்கு பணியிட  மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆர்டரை பெற அவர் பள்ளிக்கு சென்ற போது மாணவர்கள் பள்ளியை வீட்டும் போகாதீர்கள் சார்.. என அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தனர். இதனால் அவரின் பணியிட மாறுதல் உத்தர்வை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடெங்கும் பிரபலமாகி பலர் பகவானை பாராட்டி வருகின்றனர்.
நடிகர் ஹிர்த்திக்ரோஷன், காமெடி நடிகர் விவேக், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தங்களது ட்விட்டர் பக்கத்தில், ஆசிரியர் பகவானை வாழ்த்தியுள்ளனர்.