1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (10:52 IST)

பிச்சை போடாததால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!!!

பிச்சை போடாததால் முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து(65). இவர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி. தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவார்.
 
இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் பணிக்கு சென்ற இவர், சாய்ங்காலம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தேனி பஸ் ஸ்டாண்டில் காளிமுத்துவிடம் இரு பிச்சைகாரர்கள் உதவி கேட்டனர். அதற்கு காளிராஜ் நல்லா தானே இருக்கிறீர்கள் ஏன் இப்படி பிச்சை எடுக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்.
 
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அந்த இரு பிச்சைகாரர்களும் சேர்ந்து காளிமுத்துவை தள்ளிவிட்டனர். கீழே விழுந்த காளிமுத்து மீது பேருந்து மோதி, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
இதையடுத்து போலீஸார் அந்த இரு பிச்சைகாரர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.