1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (11:48 IST)

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.. விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு டிஜிபி நோட்டீஸ்..!

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்குமாறு இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
இது குறித்து டிஜிபி சங்கர்ஜிவால்  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்க்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும்  டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இனிவரும் காலங்களில் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran